நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு என ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் பிரதமரைத் தெரிவு செய்யும் விசேட அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது. 19ம் திருத்தச் சட்டத்தில் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை ஒர் உறுப்பினருக்கு காணப்படுகின்றது என ஜனாதிபதி யோசித்தால், அல்லது ஜனாதிபதியின் நிலைப்பாடாக அது இருந்தால் அதன் அடிப்படையிலேயே பெரும்பான்மை பலம் பற்றி தீர்மானிக்கப்படும் என விஜித ஹேரத் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.