GuidePedia

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி கபில கமகே ஊடாக நிதி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி அவரது மனைவி சசி வீரவன்சவையும் 13ம் திகதி விமல் வீரவன்சவையும் ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top