GuidePedia

அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கை நாடுகளை அதிகப்படுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கையின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
"இஸ்லாமிய நாடுகளில் அரசாட்சி பயம்" என்ற புதிய நூல் ஒன்றிலேயே பிபிசி செய்தியாளர் அன்றூ ஹொஸ்கென் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஐஎஸ்ஐஎஸின் பெரும் பகுதி தாக்குதல் பிரதேசம் தென் ஐரோப்பிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பெய்ன், வடஅமரிக்கா, ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, மத்திய ஆசிய மற்றும் இலங்கை ஆகியன இந்த பகுதிகளில் அடங்குகின்றன.
ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இரண்டு இலங்கையர்கள் இணைந்துள்ள செய்தி வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த புதிய செய்தியும் வெளியாகியுள்ளது.



 
Top