(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தில் 13.08.2015 அன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் புற்கள் வெட்டிக்கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை மலையில் இருந்த புற்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்த போது தேயிலை அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 7 பேரும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.