GuidePedia

(சுஐப் எம் காசிம், ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வெறும் வாய்ச்சவடாலுகளால் தம்மைச் சதாவும் பதவியில் நிலைக்கச் செய்வதற்காக முஸ்லிம்களை  ஏமாற்றிக்கொண்டிருக்கும் மூத்த தலைவர்களையும் மூக்கா தலைவர்களையும் இனியும் நம்பி பிரயோசனம் இல்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது எமது மக்களுக்கு ஆயிரம் தேவைகள் இருக்கின்றன. 25 வருடங்கள் தாண்டிவிட்ட எனது மக்களின் பிரச்சினைகளை வெற்று வீர வசனம் பேசி இன்னும் இழுத்தடிக்க முடியாது.
“என்நப்ஸ்  கேட்கிறது எனக்கு தலைமைப் பதவியை தாருங்கள்”. மற்றவர்கள் மடிகாதில் விழுந்து பெற்ற தலைமை பதவியல்ல இது.
நான் அமைச்சரானதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளதுதான். மன்னார் கடல் மீன்பிடிக்காரர் பிரச்சினையில் இருந்து வில்பத்து விவகாரம் வரை விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இழந்தவற்றை மீட்டுக்கொடுப்பதில் நான்; பின்நிற்கவில்லை. பாராளுமன்றம் வரை என்னை இழுத்து சரனடையவைக்கப் பார்த்தார்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து சுஜூதில் விழுந்த தலை அற்பப் பதவிகளுக்காகவும் அனியாயக்காரர்களின் அழுத்தங்களுக்காகவும் குனிந்து கொடுக்காது. என் இதயத்தில் இருப்பதை இறைவன் அறிவான்.
25 ஆண்டுகளுக்கு முன் புலிகளால் விரட்டப்பட்டு அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் இன்னும் தடைகள் உள்ளன. விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் சொந்த இடத்திற்கு மீள்குடியேற்றம் செய்விப்பது என்பது எனது முதல் இலட்சியமாக இருந்தது- இருக்கின்றது.
ஆமாம் சாமி போட்டுக்கொண்டு பாராளுமன்ற ஆசனத்தை சூடாக்கிக் கொண்டிருக்கும் எம்பி பதவியை என் மக்களுக்காக என் இலட்சியங்களுக்காக அர்த்தமுள்ள பதவியாக மாற்ற வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். அப்படி செய்வதனால் சுயத்தின்மீது ப10சப்படப்போகும் சேற்றைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
நான் அகதி முகாமில் அனுபவித்த கஷ்டங்கள் ஏராலம். எனவேதான் என் உடன் பிறப்புக்களின் வாழ்வியல் கஷ்டங்களை போக்க நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். என்மீது  காழ்ப்புணர்வு கொண்டவர்கள் பொய்பிரச்சாரங்களினால் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்கள் இதனை நம்பப்போவதில்லை. எனது மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி அவர்கள் வாழ்வை பசுமைப்படுத்த ஏதோவெல்லாம் செய்ய அல்லாஹ் நாடினான்;.
சென்ற தேர்தலிலே உங்களுக்கு ஏதேதோ செய்து உங்களை முன்னேற்றுவதாக வாக்குறுதி அளித்து வாக்குரிமை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்தார்கள். அவர்களுடைய உதவிகளை பட்டியல்படுத்த முடியுமா? மீண்டும் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க மலர்ந்த முகத்துடன் வருகின்றார்கள். கடந்த ஐந்துää ஆறு ஆண்டுகளிலும் அவர்களுடைய பாதங்கள் நமது கிராமங்களில் பட்டதா?
என்னை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று ஒரு கூட்டம் இப்போது உங்களை சுற்றி வருகின்றது. எதிர்வரும் 17ம் திகதி இவர்களுக்கு நல்ல பாடத்;தை நீங்கள் புகட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.  



 
Top