GuidePedia

(க.கிஷாந்தன்)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்  நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிடும் யோகராஜன் அவர்களின் மக்கள் சந்திப்பு 02.08.2015 அன்று நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் போது மக்கள் மத்தியில் யோகராஜன் கருத்து தெரிவிக்கையில்…

2015ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன மலையக மக்கள் 200 வருடகாலமாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்களின் வீடுகளை மாற்றி தனி தனி வீடுகளை கட்டி கொடுப்பதற்கு 4 வருடகாலமாக பாராளுமன்றத்தில் பேசியதன் காரனமாக இன்று ஜக்கிய தேசிய கட்சி சில மாதகாலமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு தோட்டங்களில் பயிர்செய்கை மேற்க்கொள்வதற்காக 2 ஏக்கர் காணி வழங்க 03 வருடகாலமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் காரணமாக இதனை 11 கம்பனிகள் வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் பெருந்தோட்டதுறை அமைச்சும் இதனை ஏற்றுக்கொண்டதாக  இவர் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்…

ஏதிர் காலத்தில் மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஜக்கிய தேசிய கட்சி பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கபடவுள்ளது. இதேவேளை மலையகத்திற்கு தனியான பல்கலைகழகம் ஒன்றினை அமைப்பதற்கு நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமாகும்.
அத்தோடு படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவும் நுவரெலியா மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கபடவுள்ளது.

எனவே மலையக மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்ககூடியவர்களுக்கு கட்டாயம் வாக்களிக்கவேண்டும். அந்தவகையில் மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்துவைக்கவேண்டியது அவசியமாகும்.  நடைப்பெறவுள்ள தேர்தலில் என்னையும் தெரிவுசெய்வதற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என இவர் கேட்டுகொண்டார்.



 
Top