கொழும்பு - புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கடந்த வௌ்ளிக்கிழமை இனந்தெரியாத குழு மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.