GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (02) மாலை கல்முனைக்குடியில் அமைந்துள்ள தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.கலீலுர் ரஹ்மான் அவர்களை ஆதரித்துகட்சியின் செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான வை.எல்.எஸ்ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான சித்தீக் நதீர், அன்வர் முஸ்தபா மற்றும் மௌலவி இஸட் எம்நதீர்கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சாரச் செயலாளர் ஏ.எல்.அன்ஸார், ஆசிரியர் ஆதம்பாவா ஆகியோர் உட்பட கட்சியின் போராளிகள் பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.







 
Top