GuidePedia

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் இன்று (06) மாலை தே.மு.தி.க., வினர் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.. இதில் விஜயகாந்த் , பிரேமலதா ஆகியோர் கைதாகி விடுதலையாகினர். முன்னதாக போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அனுமதி கோரி அக்கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறை ஏற்பட்டால் தே.மு.தி.க., தலைவர் கோர்ட்டில் ஆஜாராக வேண்டும் என எச்சரித்தார். இறுதி விசாரணை வரை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
போலீசாரும் ஐகோர்ட்டும் அனுமதிக்காத நிலையில், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று மாலை 4.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிரேமலதா மற்றும் மகளிரணியினரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பேட்டி அளித்த பிரேமலதா, ''அற வழியில் போராடியவர்களை அடக்குமுறை மூலம் அரசு அடக்குகிறது. மது வேண்டுமா வேண்டாமா என மக்களே முடிவு செய்யப்பட்டும்'' என்றார்.

விடுதலை:
பின்னர் இன்று (06) இரவு 8 மணியளவில் விஜயகாந்த் , பிரேமலதா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் தே.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர்.



 
Top