GuidePedia

இலங்கையில் பாரிய அளவிலான போதை பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்வதற்காக இன்டர்போல் காவல்துறை நேற்று சிவப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இவ் போதை பொருள் வியாபாரிகளின் பெயர்கள், பிரசன்ன ஜானக பெர்ணான்டோ, சுஜித் நிஷாந்த ஜயசிங்க, மொஹமட் மதிஸ் நிமல் பத்ம ஸ்ரீ பத்திரன, விதுர விஜேசிங்க, வசந்த லியனகே, மென்டிஸ் மற்றும் டப்ல்யூ.சாலிய ஆகியோர் என இன்டர்போல் வெளிப்படுத்தியுள்ளது.
இவர்களில் அதிகமானோர் இத்தாலியின் மிலானே நகரத்தில் மற்றும் சுற்றிலுள்ள உள்ள நகரங்களில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இவ் போதை பொருள் வியாபாரிகளுக்கு நன்கு ஆங்கிலம் பேச முடியும் என தெரியவந்துள்ளது.
பாரிஸ் இன்டர்போல் காவல்துறையினர் வெளியிட்டுள்ள இவ் போதை பொருள் வியாபாரிகள் தொடர்பிலான தகவல்களை இன்டர்போல் அதிகாரிகள் இத்தாலி காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



 
Top