GuidePedia

தேவையான சந்தர்ப்பத்தில் உச்சளவு அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன், பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும், வாக்குப் பெட்டிகளை பலவந்தமான முறையில் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக பொருத்தமான வகையில் உச்சளவு அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் எவ்வாறான அதிகாரத்தைப் பிரயோகிப்பது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், ஏதேனும் ஓர் தரப்பிற்கு சார்பான முறையில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடைபெறும் தினமன்று, வேட்பாளர், அவரது ஆதரவாளர் மற்றும் வெளி நபர் ஒருவர் வாக்குச் சாவடி அமைந்துள்ள 500 மீற்றர் பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top