(அஸ்ரப் ஏ சமத்)இன்று கொழும்பு ரேனுகா கோட்டலில் குருநாகல் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் மாகான சபை உறுப்பிணா் சட்டத்தரணி ஜவ்வாசா மற்றும் மன்னாரைச் சோ்ந்த குலவுதீன் ஆகியோா் அமைச்சா் றிசாத் பதியுத்தீனின் சொத்துச் சேகரிப்பு பற்றிய ஊடகவியலாளா் மாநாட்டை நாடத்தினாா்கள்.
(இடை நிடுவில் மேல்மாகாணசபை உறுப்பிணா் முஹமமட் பாயிஸ் வருகை தந்து -ஊடக மாநாட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜவ்வாசாவுக்கு சாா்பாக மேல்மாகணசபை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா் அர்சத் நிசாம்தீன் அவரது ஆட்களும் அவருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டு பாயிசை வெளியேற்றினாா்கள்)
இங்கு கருத்து தெரிவித்த ஜவா்சாகா,
முஸ்லீம் காங்கிரசின் மறைந்த முன்னாள் அமைச்சா் நுாாடின் மசுா் ஊடகாவே இவா் அரசியலுக்கு வந்து பாராளுமன்ற உறுப்பிணராகி 2 மாதத்திற்குள் இவரும் அமீா் அலியும் கட்சியில் இருந்து மாறி அமைச்சாரானாா்கள்.
12வருடங்களுக்கு முன் அவா் பாராளுமன்ற்த்தில் அவருக்குரிய சொத்துப் பிரகடனத்தில் தனக்கு ஓர் மோட்டாா் பைசிக்களோ 10 போ்ச் கானியோ இந்த நாட்டில் இல்லை என பிரகடனப்படுத்தியுள்ளாா். ஆனால் அவருக்கு தற்பொழுது –
உறவினா்கள் பெயரிலும் மனைவி, சகோதரா்கள் மற்றும் நன்பா்கள் உள்ள கம்பணிகள் பங்குகள், கொழும்பில் தெஹிவளை, ராஜகிரிய வீடுகள் பற்றிய முகவரிகளும் அது சம்பந்தமான உறுதிப்பத்திரங்களும் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டன. புத்தளம் மண்ணாா் மாவட்டத்தில் அவரது உறவினா்களுக்கு 3000 ஏக்கா் காணிகள் பற்றிய பதிவுகள் 71 கோவைகளைக் காட்டினாா்கள்.
அத்துடன் வடக்கில் கொங்கிறீட் பாதைகள், குளங்கள் நிர்மாணங்கள் தனது சகோதரின் பெயரில் உள்ள மெஹா சிட்டி நிர்மாணக்கம்பணிகள் ஊடகா கடந்த 10 வருடங்களாக வடக்கில் நிர்மண ஒப்பந்தங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டன.
கட்டாா் நாட்டில் ஆர் ஆர். ஏ நிறுவனத்துடன் வீடுகள் நிர்மாணிக்க பெற்ற அந்த நாட்டு அரபு பத்திரிகைகளில் வந்த செய்திகள் புகைப்படங்கள் மற்றும் மண்ணாா் பள்ளிவசாலுக்கு கையளிக்கப்பட்ட நிதிகள் பற்றியும் படங்களுடன் அந்த நாட்டின் நிறுவனத்தின் வெப்பதளங்கள் செய்திகள் படங்களையும் காண்பித்தனா்.
மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள் தனது மகன் அமான் அஸ்ரப் அன்று 25ஆ யிரம் ருபாவுக்கு சம்பளத்துக்கு அமர்த்தினார் இன்றும் அமான் அஸ்ரப் அவா் அவ்வாறு ஒரு கம்பணியின்தான் சாதாரணமாக தொழில் செய்கின்றாாா். அவர் ஒருபோதும் தனது குடும்பத்துக்கு சொத்து சேத்து வைக்கவில்லை இது தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகள் கற்றுத்தந்த பாடம் .
ஆனால் றிசாத் பதியுத்தீன் போன்றோா் தனிக் கட்சி நடத்தி அதன் ஊடாக பணம் வீசுகின்றனா். இவா்கள் இந்தக் கட்சியில் ஊடக அரசியல் முத்திரை பதித்தவா்கள்.
இங்கு உரையாற்றிய குவால்தீன் என்னை மிரட்டி 4 கோடி ருபா கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தாா். வெறும் சீ.டி யை ஒன்றைக் காட்டியுள்ளாா். என்னை இவ்வாறு நடத்த வேண்டாம் என்று அவா்தான் என்னை அவரது ஆடகள் ஊடகா மிரட்டினாா். பணம் தருவாதக சொன்னாா்.
இவா் பற்றிய ஏனைய சொத்துக்கள் விபரம் மேலும் கொழும்பில் உள்ளது அதனையும் பெற்றுள்ளோம் ஏற்கனவே பொலிஸ் எப்.டி.பிரிவு, லஞ்ச சொத்துசேகரிப்பு ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம். இவா் கட்டாா், பாக்கிஸ்தான் துருக்கி, பஹ்ரை போன்ற நாடுகளில் இவ்வாறு இடம் பெயா்ந்த மக்களை காட்டி நிறைய வெளிநாட்டு நிதி சேகரித்தாா். ஆனால் அந்த மக்கள் இன்னனும் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். இ ம் மக்களைக் காட்டி அவா் குடும்பத்திற்கு சொத்து சேகரி்ததுள்ளாா் எனத் தெரிவித்தாா்