(க.கிஷாந்தன்)
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய குறித்த மாணவி ஒருவர் 11.08.2015 அன்றிலிருந்து தீடிரென காணாமல் போயுள்ளார்.
11.08.2015 அன்று காலை தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தபோதிலும் அவர் கிடைக்கப்பெறவில்லை.
அதன்பின் உறவினர்கள் 11.08.2015 அன்று மாலை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.