சனிக் கிழமை (08-08-2015) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு ஒன்று பொத்துவிலில்
பெருந் திரளான இளைஞர்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுற்றது.இந் நிகழ்வில் மு.கா சார்பாக யானைச் சின்னத்தில்
களமிறங்கியுள்ள மூன்று வேட்பாளர்களும்,பொத்துவில்
முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வாசித்,உதவித் தவிசாளர்
தாஜுதீன்,மு.கா பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து
கொண்டனர்.
இதன் போது பொத்துவில் இளைஞர் காங்கிரஸ்
உறுப்பினர்களுக்கு தங்கள் சந்தேகங்களினை நிவர்த்திக்கும் பொருட்டு மூன்று
வேட்பாளர்களிடமும் தங்கள் சந்தேகங்களினை முன் வைக்க அனுமதி வழங்கப் பட்டது.இவ்வாறு அவர்களினால் விடுக்கப்பட்ட வினாக்களுக்கு மூன்று உறுப்பினர்களும்
தங்களுக்குள் வினாக்களினைப் பகிர்ந்து கொண்டு பதில் அளித்தனர்.இவர்களின் வினாக்கள் பொத்துவில் காணிப் பிரச்சினை,தொடர்ந்து பொத்துவிலிற்கு அரசியல் அதிகாரம் இல்லாமை,விகாரை வீதி
அமைத்தலின் போது பொத்துவில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி,தங்கள் வைத்திய சாலை வளப்பற்றாக்குறை,தொழில் வாய்ப்புக்கள்,பொத்துவில் போக்குவரத்து சபைக்கு
இளைக்கப்பட்டதாக கூறப்படும் அநீதி
போன்றவற்றினை அடிப்படையாக கொண்டிருந்தன.
இதன் போது முதலில் பதில் அளித்த 10ம் இலக்க வேட்பாளர் ஹரீஸ் அவர்கள் “மு.கா ஏன் மூன்று வேட்பாளர்களினை யானைச்
சின்னத்தில் களமிறக்கியது?” என்பதற்கு மிகவும் திறமையாக அனைவரும்
ஏற்றுக் கொள்ளும் விதம் பதில் அளித்தார்.இதற்கு அம்பாறை
மாவட்டத்தில் மு.கா தனித்து கேட்பதானது மகிந்த
அணியினரின் வெற்றியினை சாதமாக்கும்,இதனூடாக ஐ.தே.மு ஒரு போனஸ் ஆசனத்தினை இழக்கும் நிலைக்குத்
தள்ளப்படும் போன்ற பல சமூகம் சார்ந்த நியாயங்களினை இளைஞ்ஞர்களிடையே எடுத்து
வைத்தார்.
“இந்த றிஸாத் யார்?” என வினா எழுப்பிய ஹரீஸ் அவர்கள் “இவர் யாரினை இன்று தூற்றித் திரிகிறாரோ அந்த எமது தேசியத் தலைவர்
ஹக்கீமினூடாக மு.காவில் அரசியல் முகவரி பெற்று இன்று
அதனை அழிக்க கங்கனம் கட்டி அலைகிறார்.இத் தேர்தல்
இவரின் கங்கனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை”
“தொடர்ந்தும் பொத்துவில் அரசியல்
ரீதியாக அதிகாரம் அற்று இருக்கின்றதே!” என்ற வினாவிற்கு
பதில் அளித்த ஹரீஸ் அவர்கள் “இத் தேர்தலின் பிற்பாடு மு.காவில்
மாகாண சபைப் பதவிற்கு வெற்றிடம் ஏற்படும். அவ் வெற்றிடத்திற்கு எஸ்.எஸ்.பி மஜீதினை நியமிப்பது மாத்திரமல்லாது சுகாதார
அமைச்சினையும் அவரிற்கு வழங்குவதனூடாக பொத்துவில் மண்ணிற்கு அரசியல் அதிகாரம்
வழங்கி பொத்துவிலினை அழகு பார்க்க எமது
தேசியத் தலைவர் உறுதியளித்திருந்தார்.இதற்கு உதவித்
தவிசாளர் அவர்கள் சாட்சி” என அங்கு அமர்ந்திருந்த உதவித்
தவிசாளரின் பக்கம் தனது விரலினைச் சுட்டிக் காட்டினார்.
“இதன் போது எஸ்.எஸ்.பி மஜீத் அவர்கள் தனக்கு தேசியப் பட்டியல் தர வேண்டும் எனக்
கேட்டார்.தேசியப் பட்டியலானது அட்டாளைச்சேனைக்கு
வழங்க உறுதியளித்துள்ளதால் அதனை வழங்க இயலாத நிலையில் உள்ளேன் என தலைவர் பதில்
அளித்தார்.தனக்கு தேசியப் பட்டியல்
கிடைக்கவில்லையே என்ற பதவி ஆசை கொண்டே எங்கள் கட்சியினை விட்டும் எஸ்.எஸ்.பி மஜீத் மாறினார்.” என தனது பதில்களினை அனைவரும் ஏற்கும் விதமாகக் விளக்கினார்.
இதன் போது பதில் அளித்த 9ம் இலக்க வேட்பாளர் பைசால் காசீம் அவர்கள் தன் மீது தொடர்ச்சியாக
முன் வைக்கப்படும் குற்றச் சாட்டான மது பான சாலை அனுமதிப் பத்திரம் தொடர்பான
விமர்சனத்தினை விளக்கினார்.’உண்மையில் பள்ளிவாயலுக்கு அண்மையில்
உள்ள ஒரு இடத்தில் மது பான சாலை அமைக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்டது.அவ் மது
பான சாலையின் அனுமதிப் பத்திரத்தினை இல்லாமல் செய்யவே நான் செயற்பட்டேன்.இதற்கு களங்கம் விளைவிக்கவே இங்குள்ள அமைச்சர் ஒருவர் இக் கதையினை
புனைந்தார்” என பதில் அளித்தார்.
மேலும்,தொடர்ந்து உரையாற்றுகையில் “நான் பொத்துவில் பிரதேச மக்கள் சந்தித்த ஒவ்வொரு இன்னல்களின் போதும் உங்கள்
இன்னல் துடைக்க என்னாலான முயற்சிகளினை செய்தேன்.அனால்,பிரச்சினைகளினை உரிய
முறையில் அணுகி தீர்வினைப் பெற எனக்கு பொத்துவில் மக்களின் பூரண ஒத்துழைப்பு
தேவைப்பட்டது.இருந்த போதிலும் இதற்கு பொத்துவில் மக்கள் எனக்கு உரிய ஒத்துழைப்பு
தரவில்லை” எனக் கூறி எவ்வாறு ? அம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதனையும் அங்கு விளக்கினார்.இதனை அங்கு குழுமியிருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.”இவ்வாறு உள்ள நிலையிலும் பல தடைகளினைத் தகர்த்தெறிந்து இப் பிரதேசத்திற்கு என்னாலானவற்றினைச்
செய்துள்ளேன்.” என உணர்வு பூர்வமாக பதில் அளித்து தனது
உரையினை நிறைவு செய்தார்.இவரின் உரையின் பிற்பாடு பலத்த
கரகோசத்துடன் அவதானிக்க முடிந்தது.
இந் நிகழ்வில் மூன்றாவதாக பதில் அளித்த 2ம் இலக்க வேட்பாளர் மாகாண அமைச்சர் மன்சூர் “ தனது மாகாண சபை பதவியினை வைத்துக் கொண்டு வழங்க முடியுமான தொழில்
வாய்ப்புக்களில் குறித்த சதவீதத்தினை பொத்துவில் இளைஞ்ஞர்களுக்கு தான்
வழங்கியுள்ளதனை நினைவூட்டினார்.மேலும்,தொடர்ந்து பதில் அளிக்கையில்,பொத்துவில்
வைத்திய சாலைக்கு தேவையான தாதிமார்,வைத்திய நிபுணர்கள்,சுகாதார அதிகாரிகள்,ஊழியர்களினை தனக்கு இயலுமான வரை
நியமித்துள்ளதோடு இவ் வைத்திய சாலைக்குத் தேவையான வளப் பற்றாக்குறையினை நிவர்த்தி
செய்ய தான் மேற் கொண்ட முயற்சிகளினை. ஆதாரத்துடன் முன் வைத்தார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் “நீங்கள் உரிமையோடு எங்களிடம் கேள்விகள் தொடுப்பது மிகவும்
மகிழ்வினைத் தருகிறது.உங்கள் நம்பிக்கைகளுக்கு நாங்கள் ஒரு
போது துரோகம் இளைக்க மாட்டோம்.இது போன்று எப்போதும் எங்களினை நம்பி
நீங்கள் பயணிக்கலாம்.” எனக் கூறி தனது உரையினை நிறைவு
செய்தார்.
இறுதியாக பொத்துவில் முன்னாள் தவிசாளர்
வாசித் அவர்கள் “பொத்துவில் மக்கள் ஏன் மு.காவிற்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற கருத்துப்
பட உரையினை அமைத்திருந்தார்.இவ்வாறு இந் நிகழ்வு அங்கு
குழுமியிருந்த இளைஞ்ஞர்களின் பங்களிப்போடு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.