GuidePedia

(க.கிஷாந்தன்)

பிரதமர் அலுவலக பிரதானியும் தெனியாய ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான சாகல ரத்னாயகவின் ஆதரவாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஏழு பேரை மாத்தறை தெனியாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆதரவாளர்கள் மூவர் 06.08.2015 அன்று (வியாழக்கிழமை) கொட்டப்பொல கல்தொல பிரதேசத்தில் வைத்து மர்ம கும்பலினால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நபர்களுள் இருவர் தெனியாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காயமடைந்தவர்களை தாக்கவில்லை என பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வருகைத்தந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் தெனியாய அமைப்பாளர் விஜயதாஹாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் பஷந்தயாப்பா, கொட்டப்பொல பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர். அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.



 
Top