GuidePedia

(முகம்மட் அசாம் - முசலி)

வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்கள் 09 பேரினதும் 90 பேர்களை சிலாபத்துறையில் ஒன்று கூட்டிவிட்டு – ரிசாதின் கோட்டை சரிந்தது என்று காட்ட முயல்வது நகைப்பபுக்குரிய இடமானது என முசலிப் பிரதேச மக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.

வடமாகாண முஸ்லிம் புத்தி ஜீவிகள் ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
வன்னி மாவட்டத்தில் ஒன்றுபட்டு ரிசாத் தலைமையில் 03 பிரதிநித்துவத்தை பெறுவோம் என்ற தலைப்பில் அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

வன்னி மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு 03 பிரதிநித்துவம் என்ற சாதனை இலக்கு ரிசாத் பதியுதீனின் வியூகத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தவிடு பொடியாக்கும் செயற்பாடுகள், சூழ்ச்சிகள் ஆங்காங்க திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

முதலாவது திட்டமிட்ட சதி நடவடிக்கையாக ஹக்கீம் வன்னியில் தனித்துப் போட்டியிடுவதை குறிப்பிட முடியும். .அ.இ.ம.கா தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் ஐதேகவுடன் இநை;து யானைச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் 03 பிரதிநித்துவம் என்பது சாத்தியமானதாக உள்ளது.

இதனை முறியடிக்கும் நோக்குடனே ஹக்கீம் தனது கட்சியை தனித்துக் களமிறக்கியுள்ளார்.
முகாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் கிழக்கு மாகாணத்தில் அ.இ.ம.காவின் செல்வாக்கு அபரிதமாக அதிகரித்து வரும் இன்றைய தேர்தல் கள சூழ்நிலையில் எப்படியாவது வன்னியில் ரிசாதை தோற்கடிக்க வேண்டும ;என்ற கனவுலகில் இருந்தவராகவே ஹக்கீம் இன்று வன்னியில் முகாவை தனித்துக் களமிறக்கியிருப்பதை நோக்க வேண்டியதாக உள்ளது.

முசலிப் பிரதேசத்தில் சந்தி என வர்ணிக்கப்படும் சிலபாத்துறையில் 110க்கு உட்பட்ட குடுப்பங்களே வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் சுமார் 100 குடும்பங்கள் என்றென்றும் ரிசாதுக்காக கைகோர்ப்பவர்கள். அதனை மூடி மறைத்துவிட்டு 09 வேட்பாளர்களும் வன்னியில் 03 மாவட்டங்களிலிருந்து அழைத்து வந்த 90 பேரை புகைப்படம் எடுத்து ரிசாதின் கோட்டை சரிந்தது என காட்ட முற்படுவது இர்ண்;டாவது சூழ்ச்சித் திட்டமாக வன்னி முஸ்லிம்களால் பார்க்கப்படுகின்றது.

உண்மையான ரிசாதின் கோட்டை எப்படி இருக்கும் என்பதை மிக விரைவில் இவ்வாறான சூழ்சிக் காரர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது

அது மட்டுமன்றி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்குமாறு முகா வேட்பாளர் முத்தலிபாவா பாறுக் - ஹூனைஸ் பாறுக்கை தொடர்பு கொண்டு வேண்டியதற்கு இணங்க ஹூனைஸின் சுமார் 10 ஆதரவாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இவை எல்லாவற்றுக்கும் ஆட்சரியப்படும் வகையில் - வன்னி முஸ்லிம்களையும் அம்மக்களின் மீள்குடியேற்றத்தையும் ஊடகவாயிலாக காட்டிக் கொடுத்து வரும் ரங்காவின் மிகவும் நெருங்கிய முஸ்லிம் சகா ஒருவரும்  முகா தலைவரின் அதிரடிப் பணிப்புக்கு அமைய வன்னி முகா வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்த விடயம் இன்று வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆட்சரியத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக அமைச்சர் ரிசாத் மூலமாக வன்;னியில் 03 பிரதிநித்துவம் என்ற சாதனைய இலக்கை முஸ்லிம் சமுகத்தின் காவலன் என்று கூறிக் கொள்ளும் முகா தலைமையினாலும் இனவாத செயற்பாட்டாளர்களாலும் மிக அசூர வேகத்தில் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் அவதானம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

எனவே வன்னி மாவட்ட முஸ்லிம் மக்கள், தமிழ் ,சிங்கள கிருஸ்தவ சமுகத்தினர் இவ்வாறான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டாளர்களின் விடயத்தில் அவதானம் செலுத்தி எமது ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்றும் வடமாகாண முஸ்லிம் புத்தி ஜீவிகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top