GuidePedia

(க.கிஷாந்தன்)
100 நாள் வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை எதிர்வரும் 10ம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

(02.08.2015) அன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்…

200 வருடங்கள் வாழ்ந்து வந்த மலையக மக்களுடைய வீட்டுப்பிரச்சிரனைகளை தனிதனியான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காரணமாக இருந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவாறு செயல்பட்டமை மலையக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

அந்தவகையில் 200 வருடங்கள் வாழ்ந்த மலையக மக்களின் குடியிருப்புகளை தனிவீடுகளாக அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கையில் மும்மரமாக பிரதமர் செயல்பட்டார்.

அத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிரிசேன வெற்றிபெற்ற 100 நாள் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதில் மலையக மக்களுக்கு பல அபிவிருத்திகளை நாங்கள் மேற்கொண்டோம்.

அத்தோடு மலையகத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தபோதிலும் மலையக மக்களை பகடகாய்களாக பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்கு இம்முறை நடைபெறலுள்ள தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்க்ள்.

எதிர்காலத்திலும் ஜக்கிய தேசிய கட்சி மலையக மக்களுடைய தேவைகளை அறிந்து செயல்படும்.

அத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவா அல்லது மைத்திரிபால சிரிசேனவா என இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயல்படபோவர்கள் என மக்கள் மத்தியில் தடுமாற்றங்கள் இருந்த போதிலும் இறுதியாக மலையக மக்கள் தங்களுடைய வாக்குகளை அளித்து மைத்திரிபால சிரிசேனவை வெற்றிபெற செய்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக மாற்றினார்கள்.

அதேபோல் தான் இம்முறையும் நிச்சியமாக ஜக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றிபெற செய்வார்கள் என உறுதியாகிவிட்டது என்றார்.



 
Top