GuidePedia

(முனையூரான்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மானை ஆதரித்து கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று மாலை (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் மு.கா. ஆதவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கூச்சல் குழப்பத்தால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்களான எஸ்.எஸ்.பி. மஜீட், அன்வர் முஸ்தபா, மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் கலந்துகொண்ட இக் கருத்தரங்கில்  பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் பெரும் குழப்ப நிலைக்கு மத்தியிலும் தொடர்ந்தும் அனைத்து பேச்சாளர்களும் அங்கு உரையாற்ற வேண்டுமென்று வேண்டிக் கொண்டதற்கிணங்க கட்சி ஆதரவாளர்கள் புடைசூழ இரவு 11 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிசாரின் வருகையைத் தொடர்ந்து நிலைமை சுமுகமானதுடன் வேட்பாளர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக்கருத்தரங்கில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஜனநாயக உரிமை மு.கா. கட்சிக்காரர்களால் மீறப்பட்டதாகவும், இக்குழப்பவாதிகளை கைதுசெய்யுமாறும் கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் கல்முனை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக தெரிவித்தார்.



 
Top