GuidePedia

(க.கிஷாந்தன்)

க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களுக்குரிய பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டைகளுடன் காலை 8.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

04.08.2015 அன்று 4 ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தர பரீட்சை நாடுமுழுவதிலும் 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. 


இப்பரீட்சைக்கு 72,997 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 3 இலட்சத்து 9,069 பேர் தோற்றவுள்ளனர். பரீட்சை நடவடிக்கைகளுக்கென நாடுமுழுவதும் 22,000 பேர் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பகுதிகளில் 50000ற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

04.08.2015 அன்று காலை 8.30 க்கு பரீட்சைகள் ஆரம்பமாகின. 8.00 மணிக்கு பரீட்சை மண்டபத்துக்கு வரும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு எடுத்து வர வேண்டும்.
 

தமக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை நன்றாக பரிசீலித்து பார்ப்பதுடன் தான் விண்ணப்பித்த பாடங்கள் மொழி குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதையும் கையொப்பத்தையும் பரிசிலீக்க வேண்டும். 


இதில் ஏதாவது குறைபாடுகள், அல்லது மாற்றங்கள் இருப்பின் பரீட்சை திணைக்களத்தில் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தர வேண்டும் என்றும் ஆணையாளர் புஷ்புகுமார கேட்டுக் கொண்டுள்ளார். 


பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும். வினாத்தாள்களை நன்றாக வாசித்தறிய வேண்டும். பரீட்சை நடைபெறும் போது வெளியாரினால் பரீட்சார்த்திகளுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்துக்கும் பொலிஸ் தலைமையகத்துக்கும் அறியத்தர சகல பரீட்சை மண்டப அதிகாரிகளுக்கும் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. 


பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் - 1911 அல்லது 0112784208 / 0112784537 0113188350 / 0113140314 இலக்கங்களுக்கு அறியத்தரவும். 


அத்துடன் பொலிஸ் தலைமையகத்தின் 11 - 2421111 அல்லது 119 என்ற இலக்கங்களுக்கோ அறியத்தருமாறும் பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார். சகல முறைப் பாடுகளை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
04.08.2015 அன்று அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் அட்டன் பொஸ்கோ கல்லூரி ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.







 
Top