GuidePedia

(எம்.எம்.ஜபீர்)
தற்போதைய பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் மாஹிர் பவுன்டேசன் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் காரியாலயத்தில் செயலாளர் எம்.ஐ.மஜீட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்  உயர்பீட உறுப்பினர் ஏ.அஸீஸ், சட்டத்தரனி அறூஸ், புஹாரி மௌலவி,    அரசியல் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன்போது மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம் நாம் அனைவருக்கும் தெரியும் நாங்கள் விரும்பாத ஒன்றை யாருமே எதிர்பாரத ஒன்றை கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சிக்காரன் என்ற ரீதியில் நாங்கள் அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள கூடிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். மனச்சாட்சிப்படி நாங்கள்; வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் அனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரன் என்ற ரீதியில் கட்சியின் தலைமை எதனை சொல்கின்றதோ அதனை நிறைவேற்றுவதான் கட்சிகாரருக்கு அழகு. தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக நாங்கள் தாருஸ்ஸலாத்தில் நுழைகின்ற போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையோடும், கனவுகளோடும் உள்ளே சென்றாலும் வெளியிலே வருகின்ற போது அங்கே எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும் என்ற  உறுதிப்பாட்டின் அடிப்படையில்  நாங்கள் வெளியேறினோம்.
அதன் அடிப்படையில் நான் உங்கள் மத்தியில் சில விடயங்களை மனம்விட்டு பேசவேண்டும் என்பதற்காக இன்று உங்களை அழைத்து இருக்கின்றேன்.
யாரிடத்தில் கேட்டாலும் நாங்கள் எதிர்பாராததொரு முடிவை கட்சி தலைமை எங்களிடம் திணித்துள்ளது. அதற்காக கட்சி தலைமையை கூறை கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை அந்த சூழ் நிலை அப்படிப்பட்டதொரு சூழ்நிலை மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் மிகவும்  மனச்சிக்கலுடன்தான் தலைவர் அந்த முடிவை எடுத்திருக்கின்றார்.
எனவே அந்த முடிவை பொருந்திக் கொள்ள வேண்டும் கட்சி இருந்தால் தான் நாங்கள் தலைமையையாவது விமர்சிக்கலாம் இது ஒரு தனிமனித இயக்கம் அல்ல  அது ஒரு பெரியோரு நிறுவனம் மாமனிதர் அஷ்ரப் மறைந்தாலும் அவருடைய அந்த நிறுவனம் இன்று இயங்கி கொண்டு வருகின்றது. உங்களுடைய பாதுகாப்பு முஸ்லிம்களின் பாதுகாப்பு அந்த அப்படையில் கட்சிக்காக வேலை செய்ய வேண்டிய கடமைப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது. கட்சி தலைவருடைய தீர்மானத்தை தயவு செய்து யாரும் விமர்சிக்க வேண்டாம். அந்த அடிப்படையில் கட்சி தலைவர் இந்த தேர்தல் தொடர்பாக தீர்மானங்ளை எடுத்துள்ளார் அதனை செயல்படுத்துவது நாம் அனைவரினதும் கடமையாக இருக்கின்றது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றது. கட்சி என்ற அடிப்படையில் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்  என்பதற்காக ஆதரவாக செயற்பட வேண்டும் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்;பு தெரிவித்தோ, அதிப்தி வெளியிட்டோ நாங்கள் வேறு வேறு கட்சிகளுக்கு சென்றால் இறுதியில் நஸ்டம் அடையப்போவது நாங்கள் தான் எனவே கட்சிக்காக நாம் வேலை செய்ய வேண்டும்
நான் தனிப்பட்ட விடயம் காரணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சமூக வள தளங்களில் பல்வேறு விதமான வதந்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு கட்சி ஆதாரவளர்களை ஆதரித்து நடைபெறும் கூட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து கலந்து கொள்ள வேண்டுமென நான் உங்களிடத்தில் தயவாக கேட்கின்றேன். தலைவரின் முடிவைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் அந்த விடயங்கள் முடிந்து விட்டன அதனை விமர்சித்து பிரயோசம் இல்லை இதற்கு பிறகுள்ள நடவடிக்கையை நாங்கள்  எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக அனைவரும் கலந்தாலோசிப்போம் ஏன் என்றால் எல்லா நடவக்கைகளும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும் நாங்கள் ஒரு விடயத்தை இவ்வாறுதான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாலும் எங்களை விட பெரிய திட்டங்களை இடக் கூடியவன் இறைவன் வழங்குவான் பாராளுமன்ற தேர்தல் விடயத்தில் மனம் இடம்கொடுக்காமல் விட்டாலும் பொருந்திக் கொள்ள கூடிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அரசியல் ரீதியில் எங்களுக்கு எதிர்காலம் நன்றாக அமையும் அதன்மூலம் நமது ஊரின் சமூகத்தின் எதிர்காலம் நன்றாக அமையும் எனவும் தெரிவித்தார்.
எனக்கு  தலைவரின் முடிவில் பூரண நம்பிக்கை இருக்கின்றது தனிமனதர்களை பற்றி அவர் யோசிக்கமாட்டார் சம்மாந்துறை மக்களை பற்றியே யோசிப்பார். சகோதரர் மாஹிரா, மன்சூரா அல்லது வேறு ஒருவரா என்ற பிராச்சினை இருக்க சம்மாந்துறை மக்களுக்கு அவர் அந்தஸ்தை தந்தே தீர்வார். எனவே அம்பாரை மாவட்டத்தின் இருப்பை நாங்கள் தக்கவைக்க வேண்டுமானால் முஸ்லிம் காங்கிரஸால் மட்டும்தான் முடியும். நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் காங்கிஸின் வேர் அம்பாரை மாவட்டத்தில் தான் உள்ளது இந்த மாவட்டத்தில் சரிவை எதிர்கொண்டோம் என்றால் ஏனைய மாவட்டங்களில் பாரிய சரிவை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். எமது தளத்தை  நாம் உறுதியாக்கி கொள்ள வேண்டும் முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அதற்காக கட்சி முன்னிலைப்படுத்தியுள்ள மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதுதான் எங்களுடைய குறிக்கோள் அந்த முடிவின் அப்படையில் இந்த நிமிடத்தில் இருந்து முன்னர் நடந்துள்ள கோபங்கள், மனஸ்தாபங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு தலைவரின் முடிவுக்கும் கட்சிக்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில்  களம் இறக்கியுள்ள வேட்பாளரின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.





 
Top