அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் அடிபட்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீதே குறித்த வான் மோதியுள்ளது.
மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற வான் இவர்கள் மீது மோதிக் கொண்டு சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 04 ஆண்கள் உட்பட பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானை ஓட்டிச் சென்றவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் என்பதுடன் மிஹிந்தலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.