GuidePedia

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஒளிபரப்பு குறித்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திகளில் பக்கச்சார்பு நிலைமை காணப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தி ஒளிபரப்பில் பக்கச்சார்பு தன்மை காணப்படுவதாக தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மாற்றம் கொண்டு வரப்படாவிட்டால் தமது அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பக்கச்சார்பு தன்மையை தடுக்க தலையீடு செய்ய நேரிட்டது.
ஏற்கனவே பல தடவைகள் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச ஊடகங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க 19ம் திருத்தச் சட்டத்தில் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top