இந்திய இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஆய்வுப்பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப்பணிகளை விரைவுபடுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்தப் பாதை கப்பல் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தராமல், கடலுக்கு அடியில் நிர்மாணிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
எனினும் இலங்கை அரசாங்கம் இன்னும் இந்த விடயத்தில் தமது இணக்கத்தை வெளியிடவில்லை என்று மத்திய போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் நேற்று ராஜ்சபாவில் தெரிவித்தார்.