GuidePedia

2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,09,069 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் கூறுகின்றார்.
வினாக்களுக்கு பதில் எழுதுவதற்கு முன்பதாக வழங்கப்பட்டுள்ள அறிவுறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



 
Top