GuidePedia

வவுனியா, குட்செட் வீதியில் இன்று திங்கட்கிழமை மதியம் வேட்பாளர் றிசாட் பதியுதீன் அவர்களின் ஆதரவாளர்களின் வாகனமொன்று வீட்டு வேலியை உடைத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வாகனத்தில் வந்த அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களே சுயேச்சைக்குழு 10ல் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற போது சுயேச்சைக் குழு வேட்பாளாரின் ஆதரவாளர்கள் அவர்களைத் துரத்தி சென்றபோதே வாகனம் விபத்துக்குள்ளான சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும் இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் றிசாட் பதியுதீன் அவர்களின் இணைப்பாளருமான அப்துல் பாரியிடம் இது தொடர்பில் கேட்டபோது,
எமது ஆதரவாளர்கள் சிலர் இவ்வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேறு ஒரு வேட்பாளரின் வாகனம் இந்த வாகனம் மீது மோத வந்தது. விபத்தை தவிர்ப்பதற்காக வாகனத்தை வீதியை விட்டு செலுத்திய போது விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பாக வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.



 
Top