(க.கிஷாந்தன்)
பதுளையிலிருந்து கொழும்பு வரை சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டு ள்ளது.
அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட் டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரயிலின் என்ஜீன் மற்றும் ஏனைய 2 சரக்கு பெட்டிகள் என பகுதியே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகமையில் 120 என்ற கட்டைப்பகுதியில் 03.08.2015 அன்று மாலை 5.30 மணியளவு வேளையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அதில் பயணித்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் 04.08.2015 அன்று காலை 10 மணியளவிற்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட் டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.