GuidePedia

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் போஷகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தலின் பின்னர் முடிவு எடுக்கப்படுமென ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன ரணதுங்கவின் பிரசார கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பங்கேற்றது குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சியை விட்டும் சென்றவர்களுக்கு ஆதரவு வழங்குவது தவறாகும். அத்தகை யோருக்கு எமது கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உதவியிருந்தால் அது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



 
Top