(முஹம்மத் சப்றாஸ்)
வன்னியின் சூறாவளி பயணத்தின் நேற்றைய நிகழ்வு முல்லைத்தீவு பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டுவுள்ளது இன்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களும் அமைச்சரின் சகோதரரும் வட மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் வேட்பாளர் W.M.எஹியான் Bபாய் மற்றும் கமலன் விஜித்தன் மற்றும் கைத்தொழில் வானப அமைச்சின் பணிப்பாளர் உனைஸ் மற்றும் பச்சை படை அணி தலைவரும் எஹியான் Bபாய் அவர்களின் அன்பு மகன் அஸ்மத் அவர்களும் முஜாகித் உற்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள சகல பிரதேசங்களில் இருந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாகக் முல்லைத்தீவு,தண்ணிர்வுற்று,மு ள்ளிக்குளம்,ஹிஜிராபுரம் நீராவிபிட்டி என பல பகுதிகளில் இருந்து மக்கள் வெள்ளம் அலையடித்தை நேற்றையதினம் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிகழ்வின் போது முல்லைத்தீவு மற்றும் பிரதேசங்களில் முழங்காவில் ஆகிய காரியளையங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தின் போது குறிப்பாக முஸ்லிம் காங்கிரசின் நீண்ட நாள் போராளிகள் சிலர் இணைந்து கொண்டு வரவேற்ப்பயளித்ததுடன் தொடர்ந்தும் இருவரின் வெற்றிக்காக தாங்களும் இணைந்து செயலாற்றுவதாக கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.