எதிர்வரும் 17ஆம் திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்று பிரபல சோதிடர் உபுல் எஸ் தொம்பேபொல தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் அந்த தேசிய அரசாங்கத்தின் முதலாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இந்த நாடாளுமன்ற பதவிக்காலத்தின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் உருவாகுவார்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர், சாதாரண எம்.பியாவேனும் செயற்படமாட்டார் என்றும் அவர் கணித்துள்ளார்.
இதேவேளை, சிறிய கட்சிகளிலில் இருந்து தேசிய தலைவர் உருவாகுவார் என்றும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.