புளுமெண்டல் சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருநாணாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று கடந்த 31ம் திகதி கொட்டாஞ்சேனை புளுமெண்டல் வீதியில் நடைபெற்றது.
ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் பேரணியாக சென்றிருந்த போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பேரணி சட்டவிரோதமானதா என்பது குறித்து தேர்தல் ஆணையாளர் விசாரணை நடத்த உள்ளார்.
வேட்பாளர் ஒருவர் வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவருடன் 25க்கும் குறைவான ஆதரவாளர்களை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.
அதனை விடவும் அதிகளவான ஆதரவாளர்களை அழைத்துச் செல்ல முடியாது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 400க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
தேர்தல் நிறைவடையும் வரையில் பேரணிகளை நடாத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பேரணிகளை நடாத்திச் செல்வது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேரணியின் வீடியோ காட்சிகளை ஊடகங்களிடம் பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இதன் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.