GuidePedia

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் அடிப்படை உரிமை மனுவை நிராகரித்துள்ளார்.
தமக்கு பிணை வழங்கப்படாமைக்கு எதிராக சஜின் வாஸ் குணவர்தன அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் என்.ரனவக்க நிராகரித்துள்ளார். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன இதற்கு முன்னதாக கொழும்பு கோட்டே நீதவானிடம் பிணை கோரியிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்திலும் பிணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து சஜின் வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இதன்டி சஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்படுவார்.



 
Top