திருடன், கொள்ளையன் எனப் பெயர் சூட்டியிருந்ததைத் தொடர்ந்து தற்போது தன்னை கொலைகாரனாக்க முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
தனது அரசியல் எழுச்சியைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் அவரது ஆட்சியில் விபத்தென முடிவு செய்யப்பட்டிருந்த வசீம் தாஜுதீன் விவகாரம் தற்போது கொலையென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று காலை மருத்துவ பரிசோதனைகளுக்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா தோண்டியெழுக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கு முன்பாக வசீம் தாஜுதீன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்ற அதேவேளைகுறித்த சம்பவத்தில் மஹிந்த ஆட்சிக் காலத்தின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் மூவர் தொடர்பு பட்டிருப்பதாகவும் வெளியான தகவல்களையடுத்து தற்போது அப்பிரிவு மைத்ரிபால சிறிNசுனவினால் முற்றாகக் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.