GuidePedia

நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், புதிய நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்குமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளில் பெரும்பாலானவை தற்போது வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறந்த கொள்கையுடைய, நல்லொழுக்கம் மிக்க நாடொன்றை உருவாக்கும் அரசாங்கத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில், இன்றைய தினம் மீண்டும் புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றுக்கொள்வாரென, உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top