ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலே கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எப்படியிருப்பினும் கலந்துரையாடப்பட்டு வருபவைகள் தொடர்பில் இதுவரையிலும் எவ்வித தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை ஜனாதிபதி நேற்று விசேட உரையாற்றியதோடு இன்று பிரதமர் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.