GuidePedia

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தில் 50 கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து அதற்கு தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஐ.ம.சு.மு. தலைவர்கள் நேற்று நஞ்சு போத்தல்களுடன் ஐ.ம.சு.மு. ஊடக மாநாட்டிற்கு வருகை தந்தனர்.
அரச சொத்துக்களை திருடியவர்கள் நஞ்சருந்த வேண்டும் என மாதுலுவாவ சோபித தேரர் கூறியிருப்பதால் பிரதமர், மற்றும் அமைச்சர்கள் நஞ்சருந்த வேண்டும் என அவர்கள் இங்கு குறிப்பிட்டனர்.
ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு. பேச்சாளர் டிலான் பெரேரா, மத்திய வங்கி மோசடிக்குப் பின்னர் இடம்பெற்ற பட் டப்பகல் கொள்ளையே மத்திய அதிவேக நெடுஞ்சாலை தேர்தலில் போட்டியிடுவதால் பிரதமருக்கு நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்ட முடியாது. இது குறித்து நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டோம்.
இதன்படி அடிக்கல் நாட்ட அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் உரையாற்ற அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி பிரதமர் இங்கு உரையாற்றியுள்ளார். வடக்கு, கிழக்கை இணைத்து அமைக்கப்பட இருக்கும் புதிய அரசுக்கான முதற் திட்டமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் வழங்குவது குறித்து ஆராய நிமிக்கும் குழுவில் அமைச்சின் செயலாளர் அல்லது பிரதமரின் செயலாளர் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் அந்த குழுவில் கிடை யாது. மத்திய நெடுஞ்சாலை அமைக்க முதலில் நெடுஞ்சாலை அமைச்சர் அமைச்சரவை பத்திரம் முன்வைத்திருந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை பத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது அரசு திட்டமிட்டதை விட தமது அரசு முன்வைத்துள்ள மத்திய நெடுஞ்சாலை திட்டத்திற்கான செலவு குறைவு என பிரதமர் கூறியுள்ள போதும் 50 பில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பணத்தை திருடுபவர்கள் நஞ்சருந்த வேண்டும் என மாதுலுவாவ சோபித தேரர் கூறியிருந்தார். இதன் படி பிரதமர், ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர போன்றோர் நஞ்சருந்த வேண்டும். அல்லது பதவி விலக வேண்டும். மாதுலுவாவ சோபித தேரருக்கும் பிரதமருக்குமிடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எமது ஆட்சியில் அரச சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறியே இளைஞர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். இன்னும் 5 வருடங்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகிப்பார். மத்திய வங்கி மோசடி, மத்திய நெடுஞ்சாலை மோசடி என்பவற்றை பிரதமர் மறைக்கையில் எப்படி ஜனாதிபதியால் நல்லாட்சி செய்ய முடியும் என்றார்.
பந்துல குணவர்தன
மத்திய வங்கி திரைசேறி முறி மோசடியினால் ஏற்பட்ட நஷ்டம் 6 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இந்த அரசில் நல்லாட்சியின் பெயரால் மோசடிகள் இடம்பெறுகின்றன. அவை மறைக்கப்படுகின்றன.
அமைச்சர் கபீர் ஹாசிம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்து கூடுதல் விலைக்கு கேள்வி மனுவை வழங்கும் பிரதமரின் அமைச்சரவை பத்திரத்தை அனுமதித்தது சந்தேகத்திற்கிடமானது என்றார்.




 
Top