GuidePedia

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,56,600 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் வகிக்கும் அதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள சுஜீவ சேனசிங்க 117, 049 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் முஜீபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களும், மனோ கணேசனும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.



 
Top