GuidePedia

(க.கிஷாந்தன்)
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 03.08.2015 அன்றும் 05.08.2015 அன்றும் இடம்பெறவுள்ளது.
இம்முறை தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 66 ஆயிரத்து 823 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களும், கல்வி அதிகாரிகளும் தபால் மூல வாக்களிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.
03.08.2015 அன்றைய தினம் வாக்களிக்க முடியாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 05.08.2015 அன்று வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தபால்மூல வாக்களிப்பின் கண்காணிப்பு பணிகளுக்காக ஆயிரம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், கல்வி அலுவலகங்கள், மற்றும் இராணுவ முகாம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவிக்கின்றது.
எனினும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



 
Top