GuidePedia

(ஏ.எஸ். எம் இர்சாத்)
கொழும்பு வாழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முடிந்தவரை பாடுபடுவேன். வெறுமனே வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பதவிகள் கிடைத்த பின்னர் மக்களை மறந்து வாழக்கூடியவள் நான் அல்ல என்று கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் திருமதி பெரோஸா முஸம்மில் தெரிவித்தார்.
மாளிகாவத்தையில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசுகையில்,
நான் மக்களோடு மக்களாக வாழ்பவர். தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மேடையில் முழங்கி வாக்குறுதிகளை வழங்கிச் செல்பவர் அல்ல. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வாழ் மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். சமுக சேவை என்பது எனது இரத்தத்தில் ஒட்டியவொன்று. எனது பெற்றோர்கள் காட்டித்தந்த வழியில் நான் சேவையாற்றி வருகிறேன். நமது மக்கள் படுகின்ற கஷ்டங்களை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். வாழ்வதற்கு பொருத்தமறற வீடுகளில் வாழ் மக்களது தோட்டங்கள் மூலை முடுக்குகளிலும் எனது கால்கள் கடந்த 50 வருடங்களாக    பட்டுள்ளன.
ஏழைமக்கள் படும் துன்ப, துயரங்களை நான் அறிவேன். கடந்த காலங்களில் இந்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை பணிகளை மேற்கொண்டுள்ளேன். மேற்கொண்டு வருகிறேன். எனக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்தால் இதைவிட இந்த மக்களுக்கு அதிகம் அதிகம் சேவை செய்ய முடியும். பதவியைக் கொடுப்பவன் அல்லாஹ். நான் செல்லும் இடங்களில் அணிதிரளும் மக்கள் கூட்டம் எனது வெற்றியை எதிர்வு கூறுகின்றது. இறைவன் எனக்கு நிச்சயம் வெற்றி தருவான்.
கொழும்பைப் பொறுத்தவரையில் பெண்கள் படுகின்ற கஷ்டங்கள் ஏராளம். பெண்களின் பிரச்சினைகளைப் பெண்களால் தான் புரிந்து கொள்ள முடியும். பெண்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டவள் என்ற வகையில் நான் இந்தச் சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபடுவேன். நானும் ஓர் அரசியல் வழியில் வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் கடந்த காலங்களில் கொழும்பு வாழ் மக்களின் துயரங்களை கண்ணரக் கண்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.




 
Top