GuidePedia


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணி சார்பில் கப்புகெதர ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்ளையும் செஹான் ஜயசூரிய 40 ஓட்டங்ளையும் பெற்றுக்கொண்டனர். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சொஹய்ப் மலிக் 3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்ளை கைப்பற்றினார். 

பதிலுக்கு 173 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. 

பாகிஸ்தான் அணி சார்பில் அன்வர் அலி 46, சஹீட் அப்ரிடி 45, ஓட்டங்களைப் பெற்றனர். 

பந்து வீச்சில் இலங்கை சார்பில் பெர்ணான்டோ 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிளைக் கொண்ட 20க்கு 20 தொரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. 

இந்தப் போட்டியைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



 
Top