GuidePedia

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்யும் முயற்சிகள் இப்போதிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே அவர்களை கட்சி தாவச் செய்யும் பேரம் பேசல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய சேதியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் அந்த சவாலை எதிர்நோக்கும் வகையில் இவ்வாறு  பிரதான கட்சிகள் உறுப்பினர்களை தம்பால் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் பிரதான இரண்டு கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் ஆகியனவற்றில் வெற்றியீட்டக் கூடும் என உறுதியாக நம்பப்படும் வேட்பாளர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றயீட்டக் கூடிய வேட்பாளர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு தரப்பும் பெரும்பான்மை பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பதவிகள் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களை வழங்குவதாகத் தெரிவித்து வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை தம்பால் ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



 
Top