நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுற்று நிருபம் ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 17-19 வரை சகல அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாகவும், ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் அரச முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அச்சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.