முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கருத்தை தாம் முற்றாக மறுப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போது பொதுபலசேனா அமைப்பை விமர்சித்திருந்தார்.
அதில் அவர், பொதுபல சேனா என்னும் அமைப்பானது அமெரிக்கா உட்பட மேற்குலகின் கைக்கூலியாகவே செயற்படுகின்றது.
கடந்த எனது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளை எமக்கு இல்லாமல் செய்ததோடு, எமது ஆட்சிக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களை திரளச்செய்தது இந்த பொதுபல சேனா என்னும் அமைப்புத் தான்.
அதே வேலையை இன்று சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை எனக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே இப்பொழுது செயற்பாடுகளில் அது இறங்கியுள்ளது என்றும் மகிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் தாம் கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.