நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப் பட்டிருந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச அதற்கு இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தனது பதில் கடிதத்தில், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.