GuidePedia

எதிர்­வரும் 17ஆம் திகதி சிங்­கள தேசி­யத்தை கட்­டி­யெ­ழுப்ப சிங்­கள மக்கள் அணி­தி­ரள வேண்டும். இல்­லை­யெனில் இலங்கை என்ற நாடு எமக்கு இல்­லாமல் போய்­விடும் என்று சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அமைப்­புகள் தெரிவித்துள்ளன.
ஹலால் எதிர்ப்பு மோதல் மற்றும் அளுத்­கம வன்­மு­றைகள் தொடர்­பாக விசா­ரித்து அச்­ சதித் திட்­டத்தின் பின்­ன­ணியில் இருந்­தோரை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டு­மென்றும் அவ்­அ­மைப்­புக்கள் வலி­யு­றுத்­தின.
கொழும்பு விஹா­ர­ம­கா­தேவி உள்­ளக அரங்கில் நேற்று திங்கட் கிழமை இடம்­பெற்ற 64 சிங்­கள பௌத்த அமைப்­புக்கள் இணைந்து 5 விட­யங்­களை வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கையெ­ழுத்­திட்டு கைய­ளித்த “தேசிய உடன்­பாடு” என்ற உடன்­ப­டிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தேசிய அமைப்­புக்­களின் ஒன்­றியம் ஆசீர்­வாத மாநாடு என்ற பெயரில் இதனை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. தேசிய உடன்­பாட்டு பிர­க­ட­னத்தை எதிர்­கால பிர­த­ம­ரிடம் கைய­ளித்தல் என இந் நிகழ்­வுக்கு பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.
காலை 10.58 மணிக்கு 64 உள்­நாட்டு, வெளி­நாட்டு சிங்­கள பௌத்த அமைப்­புகள் சார்பில் இப்­பி­ர­க­ட­னத்தில் கையெ­ழுத்­தி­ட்டு மஹிந்த ராஜபக்ஷ விடம் கைய­ளித்தன.
இவ் உடன்­ப­டிக்­கையில் எல்­லா­வெல மேதா­னந்த தேரர், வெல்­க­முவே நாலந்த தேரர் உட்­பட பௌத்த குரு­மாரும், தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் டாக்டர் குண­தாச அம­ர­சே­கர, பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார உட்­பட பலரும் கையெ­ழுத்­திட்டுள்ளனர்.
இந்­நி­கழ்வில் ஏரா­ள­மான பௌத்த குருமார் மற்றும் பொது­மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
முன்னாள் அமைச்­சர்­க­ளான காமினி லொக்­குகே, திஸ்ஸ அத்­த­நா­யக்க, பந்­துல குண­வர்த்­தன, குமார வெல்­கம உட்­பட பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
ஐந்து விட­யங்­களை வலி­யு­றுத்தி கையெ­ழுத்­தி­டப்­பட்டு மஹிந்த ராஜ­பக் ஷ விடம் கைய­ளிக்­கப்­பட்ட இவ் உடன் படிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சர்­வ­தேச உளவுப் பிரி­வி­னரின் சதித்­திட்­டத்­திற்கு அமைய புதிய ஈழத்­திற்­கான திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­காக நாட்­டுக்குள் அரபு வசந்­தத்தை ஏற்­ப­டுத்தி இரத்தம் சிந்­தாமல் தேர்தல் மூலம் மஹிந்த ராஜபக் ஷவை தோல்வி அடையச் செய்தனர். எனினும் பிரி­வி­னை­வாத பிரி­வி­னை­வா­தத்­திற்கு சார்­பான ஆட்சி உரு­வா­வதை தோல்­வி­ய­டையச் செய்ய வேண்டும்.
சமஷ்டி முறையில் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் வடக்கு – கிழக்கு இணைக்கவும் முயற்­சிக்கும் வேளையில் மோதல்­களை ஏற்­ப­டுத்தி மக்­களை வீதியில் இறக்கி சர்­வ­தே­சத்தின் தலை­யீட்டை உரு­வாக்கி அதன் ஊடாக நாட்டை இரண்­டாகப் பிரிக்கும் ஈழத் திட்­டமும் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கு மேல­தி­க­மாக சர்­வ­தேச அடிப்­ப­டை­வாத மத, யுத்தக் குழுக்­களை நாட்­டுக்குள் ஊடு­ருவச் செய்து தேச எல்­லைகள், மூலம் இனங்­க­ளி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தி நாட்டை சுடு­கா­டாக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை தோல்­வி­ய­டையச் செய்வோம்.
சர்­வ­தேச யுத்தக் குற்­றச்­சாட்டு விசா­ர­ணைக்கு உள்­ளக விசா­ரணை முத்­தி­ரை­குத்தி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள முயற்­சியை தோல்­வி­ய­டையச் செய்வோம்.
19ஆவது திருத்தம் மீள் திருத்தம் செய்­யப்­பட வேண்டும். 13ஆவது திருத்­தத்தில் பலாத்­கா­ர­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­னை­வாத ஷரத்­துக்­களை நீக்க வேண்டும்.
மற்றும் ஹலால் விரோத மோதல் உட்பட
அளுத்கம வன்முறைகள் தொடர்பாக விசார ணைகளை நடத்தி அதன் பின்னணியிலுள்ள சதித்திட்டத்தினை பகிரங்கப்படுத்த வேண் டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண் டும்.



 
Top