GuidePedia

காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 22 வயதுக்கு உட்பட்ட ரீ-20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியில் மருதமுனை பிரைட் பியூச்சர் அணியினரை வெற்றி கொண்டு கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் சாம்பியனானது.

காரைதீவு விளைாட்டு மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மருதமுனை பிரைட் பியூச்சர் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் 10.4 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர். இப்போட்டியில் 35 பந்துகளை சந்தித்து 72 ஓட்டங்களைப் பெற்ற நட்சத்திர வீரர் அஹ்னாப் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.



 
Top