GuidePedia


2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். 


மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- 



கேள்வி:- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? 



பதில்:- தமிழகத்தில் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவானதாகவே உள்ளது. தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது. இதே கூட்டணியே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். 



கேள்வி:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த பா.ஜ.க. வலியுறுத்துமா? 



பதில்:- பூரண மதுவிலக்கிற்காக பா.ஜ.க. பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. 11-ந்தேதியும்(நாளை) தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல 2016-ம் ஆண்டு தை மாதம் பிறந்தவுடன் மதுவிலக்கை படிபடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 



இவ்வாறு பதில் அளித்தார்.



 
Top