GuidePedia

வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை அதிகாரிகளினால் தோண்டி எடுக்கப்பட்டதாக  அதேவேளை ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடிக்கு செல்ல எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெஹிவளை முஹியித்தீன் பள்ளிவாயலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோண்டப்படும் ஜனாஸாவை வீடியோ காட்சிகளோ, புகைப்படமோ எடுக்கக் கூடாது என தாஜுதீனின் குடும்பத்தார் பொலிஸாரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே , மேற்படி ஊடகவியலாளர்கள் மையவாடிக்குச் செல்லக் கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பொலிஸார் பிறப்பித்துள்ளனர்.
அதேவேளை ஜனாஸா அடக்கபட்டுள்ள இடத்தை சுற்றி கருப்பு நிற பொலிதீன்களால் சம்பூர்ணமாக மறைக்கபட்டுள்ளதால் உயரமான மாடி ஒன்றில் இருந்து பார்த்தாலும் ஜனாஸா தோண்டப்படுவதை பார்க்க முடியாத வண்ணம் மறைக்கப் பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.
நீதிமன்ற பிரேத பரிசோதனை வைத்திய அதிகாரிகள் மற்றும் மஜிஸ்ட்ரேட் நீதிபதி ஆகியோர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மையவாடியில் இன்று காலை 7 மணியில் இருந்து அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தோண்டப்படும் ஜனாஸா அங்கு வைத்தே பரிசோதனை செய்யப்படுமா அல்லது கொண்டு செல்லப்படுமா என்பது பற்றிய மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.



 
Top