(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் றிஷாத் பதியுதீனை சமூகத்திலிருந்தும், அரசியல் வாழ்விலிருந்தும் ஒழித்துக் கட்டுவதற்கு எம் சமூகத்தைச் சேர்ந்த சமூகவிரோதிகள் (கலிமா உரைத்த இஸ்லாமிய விரோதிகள்) முன்வந்துள்ளனர். இவர்கள் செய்யும் இவ்வேலையானது பொதுபல சேனா, ராவய பலய உள்ளிட்ட இனவாத சக்திகள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தைவிடவும் மோசமானது. இவ்வாறு பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்
தங்களது சுயநல இலாபங்களுக்காக றிஷாத் பதியுதீனை பழிவாங்கி முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற மிகமிக இழிவான செயலை இவர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறான துரோகிகள் மக்களினால் இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அல்லாஹ்வின் உதவியால் இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
முஸ்லிம் சமூதாயம் இனவாதிகள், மதவாதிகளினால் சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்கு கடந்த காலங்களில் ஆளாகியது. இவர்களின் செயற்பாடுகள் இன்றும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இவ்வாரானவர்களுக்கு உரமூட்டும் வகையில் எம் சமுதாய துரோகிகள் உடந்தையாக இருப்பது மிகவும் கவலைக்குரியது. முஸ்லிம் சமூதாயம் சின்னாபின்னப்பட்டு சரியான பாதையோ, வழியோ தெரியான நிலையில் எமது சமூகத்திற்காக யார் குரல் கொடுப்பார்கள் என்று ஏங்கியிருக்கும் நிலையில் எமக்காக குரல் கொடுத்து வரும் தலைவர் றிஷாத்தை அழிப்பதற்கு இவர்கள் துணைபோகின்றனர்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபடும் றிஷாத்தை பாதுகாப்பதற்கும் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கவும், எதராகவும் செயற்படும் துரோகிகளை முஸ்லிம் சமூதாயத்திலிருந்து துடைத்தெரிவது முஸ்லிம்களின் இன்றைய அவசிய தேவையாக இருக்கின்றது.
இவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ்வின் சாபம் கிடைக்கும். பொய்யான குற்றங்களையும் அபாண்டங்களையும் அவர்மீது சுமத்தி சிங்கள சமூகத்தில் அவரை பிழையான ஒருவராக காட்டி அவரை முஸ்லிம் சமூகத்திலிருந்தும் அரசியல் வாழ்விலிருந்தும் பிரித்து விடலாம் என எண்ணுகின்றனனர்.
அல்லாஹ்வின் உதவியால் அவருக்கான ஆதரவும் ஒத்;துழைப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை அவருக்கு எதிராக செயற்படும் உங்களின் செயற்பாடுகளிலிருந்து காணமுடிகின்றது.
முஸ்லிம் தலைமையின் அவசியம் பற்றி இன்று பேசப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு குரல்கொடுக்கும் ஒரேயொரு தலைவராக அவரையே மக்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். இறைவனின் உதவியால் அவர் வெற்றி பெறுவார். அவரது வெற்றியை அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் றிஷாத் பதியுதீன் தொடர்பாக கருத்துத் தெரிவித்தவர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு றிஷாத் பதியுதீனை ஆதரிக்க வேண்டும். அவரின் வெற்றிக்காகவும் சமூக விரோதிகள் ஒழியவும் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.