GuidePedia

ரகர் வீரர் தாஜுடினின் மரணத்தில் மஹிந்தவின் கைகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரரிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனது தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் வசீம் தாஜுடினின் மரணம் குறித்த முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர், தமது ஆட்சி அமையும் என கனவு காண்பதாகவும், அது வெறும் கனாவாகவே இருக்கும் என்றும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.


நன்றி : ஆதவன் நியூஸ்



 
Top