GuidePedia

ப்ளுமெண்டல் வீதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சித்தி நசீமாவின் குடும்பத்தினருக்கு புதிய வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (05) உத்தியோகபூர்வமாக கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சித்தி நசீமாவின் வீட்டிற்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குடியிருந்த வசதி குறைந்த வீட்டிற்குப் பதிலாக ஒரு வாரத்தினுள், வாழ்வாதாரத்திற்கு பொருத்தமான வகையிலான புதிய வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top